விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

(கமலி )
களுதாவளை வீதிப்பிள்ளையார் ஆலயத்தடியில் இடம் பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்   பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கருணாகரன் உதயகுமார் ( அபிவிருத்தி உத்தியோகத்தர் ) என தெரியவருகின்றது.

மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் நடந்து பயணித்தவர் உட்பட ஐவர் மீது மோதியதுடன் இரண்டு கடைகளும் சேதத்திற்குள்ளாகிருந்தது.

அதில் மேற்படி உயிரிழந்தவர் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கடையில் பழம் வாங்கிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கில் மோதியதால் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் காயமடைந்த நால்வரின் மூவர் பலத்த காயங்களுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் ஒருவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.