பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு செய்து தாக்க முயற்சித்தவர் கைது!


மட்டக்களப்பு ஏறாவூர் பொலிசாரியனால் செங்கலடி பொது சுகாதாரவைத்திய பரிசோதகரை தாக்க முயற்சித்தவரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவிவித்தனர்.
செங்கலடி தேவாலயம் ஒன்றினும் கொரோனா விழிப்புணர்வுக்காக சென்ற செங்கலடி பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.தவேந்திரராஜா அவர்களை தாக்க முயற்சித்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கலடி ரமேஸ்புரம் கணபதிப்பிள்ளை நகர்ப் பகுதியில் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளாகிய நபர் ஒருவர் இனங்கானப்பட்டுள்ளார். குறித்த நபர் செங்கலடி பஸ்தரிப்பு நிலையமொன்றிகும் சென்றிந்தமையினால் குறித்த பஸ் நிலையத்தின் அருகே காணப்படும் செங்கலடி மெதடிஸ்த தேவாலயப்பகுதியில் கொரோனா அச்ச பாதுகாப்பு விழிப்புணர்வு சம்மந்தமாக சென்ற பொதுசுகாதார பரிசோதர் மீது தேவாலயத்தினுள் வைத்து தாக்குதல் முயற்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தேவாலயத்தின் குருமுதல்வரோடு செங்கலடியில் பதிவான கொரோனா வைரஸ் தொடர்பிலும் அது தொடர்பான பாதுகாப்பு தொடர்பாகவும் பொதுசுகாதார வைத்திய பரிசோதகர் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் போது அங்கு சென்ற நபரொருவர் தேவாலயத்திலிருந்து பொதுச்சுகாதார பரிசோதகரை வெளியேறுமாறு தகாத வார்த்தைப்பிரியோகங்களினால் கூறியுள்ளதுடன் பரிசோதகரை தாக்கவும் முயற்சித்துள்ளார்.

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஏறாவூர் பொலிசார் குறித்த நபரை உடன் கைது செய்துள்ளனர்.