ஒன்லைன் விளையாட்டால் வந்த வினை! கைத்தொலைபேசியினை தாய் பறித்ததால் 14 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை!


கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்த பாடசாலை மாணவன் ஒருவரிடம் அவரது தாயார் கைத்தொலைபேசியைப் பறித்தமையால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இச் சம்பவம், சுழிபுரம் பிளவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09 இல் கல்வி கற்கும் 14 வயதான சிவனேஸ்வரன் நேருஜன் என்ற மாணவனே தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக கைத்தொலைபேசியில் விளையாட்டில் ஈடுபட்டு வந்தமையால் மாணவனின் தாயார் அதைப் பறித்து வைத்துள்ளார். இதைச் சகிக்க முடியாத மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.