புத்தாண்டு காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்றுமாறு மக்களுக்கு எச்சரிக்கை!தமிழ், சிங்கள புத்தாண்டு காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான மற்றும் அமைதியான புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மக்கள் எல்லா நேரங்களிலும் வழிகாட்டுதல்களையும் அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொது இடங்களில் எல்லா நேரங்களிலும் முகக்கவசம்  அணியுமாறும் சமூக இடைவெளியை  பேணுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

இதேநேரம், பண்டிகை காலங்களில் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் பதிவாகின்றன என்பதால், வீதி விபத்துக்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அஜித் ரோஹன கேட்டுக்கொண்டனர்.

இந்த காலகட்டத்தில் வீதி விபத்தில் உயிரிழக்காமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ் பேச்சாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.