மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது குழந்தையினை பெற்றெடுத்த தாய்மாருக்கு உதவி தொகை வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலையில்  உள்ள பாடசாலைகளை  கருத்தில் கொண்டு    மட்டக்களப்பு நரிப்புல் தோட்டம் என்னும் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் மூன்றாவது குழந்தையினை பெற்றெடுத்த 5 தாய்மாருக்கு தலா ரூபாய் 10,000 வழங்கப்பட்டதுடன் பிள்ளைகளின் 18  வயது வரை மாதம் ஒன்றிற்கு  ரூபா 1000 வங்கியில் வைப்புசெய்யப்பட்டது.

 இத்திட்டத்தின் கீழ் மேலும் மகிழவட்டவான், பங்குடாவெளி, விழாவட்டவான், நெல்லூர், சொறுவாமுனை, மணிபுரம் ஆகிய கிராமங்கள் உள்வாங்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இத்திட்டம் தொடங்கி 6 ஆவது ஆண்டு காலடிபதித்த இவ்வேளையில்  இத்திட்டத்தின் கீழ் 132 தாய்மார்கள் உதவி தொகை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

 27  திகதியன்று   மேலும் 17 தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளனர் இன்று இத்திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற்று வரும் அனைத்து  தாய்மாருக்கும் பிள்ளைகளுக்கும் நாட்டின் அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு  உடுதுணியும் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது. 

இந்த உதவித்தொகை சுவிஸ் அறம் (swiss Aram)என்னும் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டது. 6 வருடகாலமாக  இத்திட்டத்திற்கு உதவி செய்யும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சுவிஸ் அறம் அமைப்பு நன்றியை தெரிவித்ததுடன் மேலும் உதவி தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

மற்றும் இன்று இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதி கல்வி பணிப்பாளர்  மகேந்திரகுமார், பட்டிருப்பு கல்வி நிர்வாக பிரிவு, மற்றும் பிரதி கல்வி பணிப்பாளர் (தாபன மற்றும் பொது முகாமைத்துவம்) மட்டக்களப்பு   க.ஹரிகரராஜ் , இத்திட்டத்திற்கு எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிற சுவிஸ் வாழ் திருமதி சிவசாந்தி அமிர்தலிங்கம் , ஆசிரியர்  வே.சசிகரன் ,கிராம அபிவிருத்தித் தலைவர், கோவில் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பெரியோர்கள் தாய்மார்கள் ஊர்மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.