மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவு பஞ்சம் வராத வகையில் தடுப்பது குறித்து கலந்துரையாடல் !



நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்களின் உணவு தேவைப்பாட்டுக்கான நோக்கிய திட்டங்கள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வறிய குடும்பங்களின் உணவு தேவைப்பாட்டுக்காக விவசாய உற்பத்தியினை வழங்கும் வகையில் மாவட்டத்தில் பயிச்செய்யப்பட்ட நெல்லினை கொள்வனவு செய்து வீட்டுக்கு இரண்டு மூடைகள் என்ற வகையில் நெல்லினை வழங்க நடைமுறைப்படுத்தவதற்கான திட்டங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர்
கே.கருணாகரன் தலைமையில் அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது .

இதேவேளை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட விவசாய மற்றும் மீன்பிடி அமைப்புகளுடான கலந்துரையாடல் மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவு பஞ்சம் வராத வகையில் பயிரிடப்பட்ட விளைச்சல்களை பாதுகாப்பான முறையில் அறுவடை செய்வதற்கும்,மீன்பிடி படகுகளுக்கு இலகுவாக எரிபொருளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கும் திட்டம் மற்றும் அதனை எடுத்து செல்வதற்கான அனுமதியினை வழங்குவது தொடர்பான கலந்துரையாடப்பட்டது .

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.