வாகரை, ஊரியன்கட்டு அ.த.க பாடசாலையில்; புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 98ஆம் ஆண்டுக்கு பின்னர் மாணவி சித்தி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாக் கல்வி வலயத்துக்குட்பட்ட கோறளைப் பற்று வடக்கு, வாகரை கோட்டத்துக்குட்பட்ட மட்/ஊரியன்கட்டு அ.த.க பாடசாலையில் இம்முறை 9 மாணவர்கள் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி  ஜே. தரணியா எனும் மாணவி 147 புள்ளிக்ளைப் பெற்று இப் பாடசாலைக்கு பெருமைதனை ஈட்டியுள்ளார்.


இவ் வெற்றியீட்டலானது 1998ம் ஆண்டிற்குப் பின்னர் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வாகரைப் பிரதேசத்தில் வாகரை மாகாவித்தியாலயமும்;, ஊரியன்கட்டு அ.த.க பாடசாலையுமே  5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி  வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.