(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச செயலாளராக உ.உதயஸ்ரீதர் இன்று புதன் கிழமை முதல் செயற்படும் வண்ணம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
மகிழ்சியில் பொது மக்கள் வீதியில் இறங்கி நேற்று (செவ்வாய் கிழமை) (14)வெடிக் கொழுத்தி கொண்டாடினார்கள்.
இவருக்கான நியமனக்கடிதம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தரவிற்கு இணங்க இவ் நியமனம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
இதே அமைச்சே இவரை மாவட்ட செயலகத்திற்கு மேலதிக அரசாங்க அதிபராக கடந்த திங்கள் கிழமை முதல் செயற்படும் வண்ணம் நியமித்திருந்தது.
இவ் நடவடிகைக்கு கண்டனம் தெரிவித்து கடந்த திங்கள் கிழமையன்று (14) பிரதேசத்தின் பொது மக்கள், வர்த்தக சங்கத்தினர், மற்றும் ஆட்டோ சங்கத்தினர் இணைந்து கடையடைப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவரது இடமாற்றத்தைச் ரத்துச் செய்யக்கோரி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு விலாசமிடப்பட்ட மகஜர் ஒன்றும் உதவி அரசாங்க அதிபர் எஸ். கிரிதரனிடம் கையளித்திருந்தனர்.
இது இவ்வாறு இருக்கும் வேளையில் மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்தும் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகணசபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் கருத்துக்கு மதிப்பளித்தும் இவரது இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பிரதேசத்தின் வர்த்தக சங்கத்தலைவர் செல்லம் மோகன் கருத்து தெரிவித்தனர்.
இவரது இடத்திற்கு மா.தயாபரன் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் தனது கடமைகளை குறித்த தினமான திங்கள் கிழமையன்று மக்களின் பலத்த எதிர்பிற்கு மத்தியில் பொறுப்பேற்றிருந்தார். இவர் தற்போது ஏற்கனவே கடமையாற்றிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு தற்காலிக இடமாற்றம் பெற்று சென்றுள்ளாதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இவர்கள் இருவரது பதவியேற்பு பலப்பரீட்சை தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்றன. இதனால் மக்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் செய்வதறியாது திண்டடியதும் குறிப்பிடத்தக்கது.