(குவேதன் திக்கோடை)
திக்கோடை கணேஷ் வித்தியாலய ஓய்வு பெற்ற அதிபர் கங்காதரன் அவர்களின் சேவையினை பாராட்டி திக்கோடை மக்களால் கௌரவிப்பு நிகழ்வு 20/09/2014 சனிக்கிழமை திக்கோடை கணேஷ வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் திக்கோடை அம்பாறை பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவசிறி நாதன் , வெல்லாவெளி பிரதேச இணக்க சபை தவிசாளர் திரு.த .திருவருட்செல்வன் அவர்களும் மற்றும் திக்கோடை கணேஷ் வித்தியாலய அபிவிருத்தி சங்க செயலாளர் யா.புவனசிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் ஆலய பரிபாலன சபை,கிராம அபிவிருத்தி சங்கம் , சிவகலா மன்றம், மாதர் அபிவிருத்தி சங்கம், பாரதி விளையாட்டு கழகம்,அந்தி ஒளி கல்வி வட்டம்,போன்ற அமைப்புகளும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
அதிபர் உரையாற்றும் போது இப் பாடசாலை பற்றியும் திக்கோடை கிராமம் பற்றியும், கிராமத்தின் சிறப்பு பற்றியும் பேசினர். வெல்லாவெளி இணக்க சபை தவிசாளர் அவர்கள் உரையாற்றும் போது அதிபர் ஆற்றிய சேவை சிறப்பானது மகத்தானது இனிமேல் இதே போன்றதொரு அதிபர் கிடைப்பது அரிதான விடயம் ஆனாலும் எங்கள் கிராமத்துக்கு வருகின்ற அதிபர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான் அது எங்கள் திக்கோடை மண்ணினுடைய மகத்துவம் இனி வருகின்ற அதிபரும் நல்லவர் தான் வருவார் என்பதிலும் நம்பிக்கையாக இருக்கின்றோம்.என்று தவிசாளரின் உரை அமைந்து இருந்தது.






.jpg)

.jpg)





