மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய உற்பத்தி திறன் அபிவிருத்தியில் முதலிடம் பெற்று இன்றைய தினம்(04.09.2014)விருதினை பெற்றுக்கொள்ளும் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு செங்கலடி பொது அமைப்புக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.
இலங்கை தேசிய உற்பத்தி திறன் செயலகம் உற்பத்தி திறன் அமைச்சினால் வருடா வருடம் வழங்கப்படும் தேசிய உற்பத்தி திறன் விருதினை இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுக்கொண்ட செங்கலடி பிரதேச செயலகம் பெற்றுக் கொண்டுள்ளது.
மேற்படி விருதானது தேசிய உற்பத்தி திறன் அமைச்சினால் தேசிய உற்பத்தி திறன் அபிவிருத்தியில் முதலிடம் பிடித்த பிரதேச செயலகங்களுக்கும,; திணைக்களங்களுக்கும் வருடாவருடம் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இம்முறை பிரதேச செயலாளர் திரு. உதயசிறிதர் தலைமையில் செயற்பட்ட செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு குறித்த விருது கிடைத்துள்ளது.
இன்றைய தினம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.30மணிக்கு விருதினை பெறும் செங்கலடி பிரதேச செயலகத்திற்கும் குறித்த விருதினை பெறுவதற்கு தலைமைதாங்கிய செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு. உதயசிறிதர் மற்றும் ஏனைய நிர்வாக தலைவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் தங்களது மனம் நிறைந்த வாழ்த்துக்களை செங்கலடி பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
கடந்த முறை பிரதேச செயலாளர் திரு. உதயசிறிதர் அவர்கள் வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய காலப்பகுதியிலும்; வெல்லாவெளி பிரதேச செயலகம் தேசிய உற்பத்தி திறன் அபிவிருத்தியில் முதலிடம் பெற்று தேசிய உற்பத்தி திறன் விருதினை பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.