ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்கு தேசிய உற்பத்தி திறன் விருது வழங்கிவைப்பு

(சித்தாண்டி நித்தி) ஏறாவூர்பற்று பிரதேச செயலகம் தேசிய உற்பத்தி திறன் அபிவிருத்திக்கு தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப்பெற்று ஏறாவூர்பற்று பிரதேச செயலகம் பெருமைசேர்த்துள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்  (04.09.2014)  பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.

 இந்நிகழ்வுக்கு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர், உதவிதிட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர்.கங்காதரன், அபிவிருத்தி உதவியாளர் திருமதி. பி.ஜீவபூரணி, அபிருத்தி உத்தியோகத்தர் ப.சுமன், மற்றும் வாகிசன் ஆகியோர் இவ் நிகழ்வுக்கு கலந்துகொள்வதற்காக சென்றிருந்தனர்.   விருதுவழங்கும் நிகழ்வில் உற்பத்தி திறன் ஊக்குவிற்பு அமைச்சர் பசீர் சேகுதாவுத் அவர்களிடமிருந்து ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர்  விருதினை பெற்றுக்கொண்டார்.