(நித்தி) சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 13வது நாளாக மகோற்சவ திருவிழா மிகவும் சிறப்பான முறையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருவிழாவில் இன்று மயில்கட்டு வீசேட திருவிழா நடைபெறவுள்ளது.
இன்று இரவு சனிக்கிழமை (6) மயில் கட்டு பூசை நடைபெறவிருப்பதால் சுமார் மாலை 5.30 மணிக்கு பூசைகள் ஆரம்பிக்கப்பட்டு சுவாமி வெளிவீதி உலா முடிவடைய மயில் கட்டு பூசைகள் ஆரம்பிக்கபடவுள்ளதுடன் அதனை தொடர்ந்து முருகப்பெருமான் மயில்மீது ஏறிவந்து முருகனுக்கும் வள்ளிக்கும் திருமணம் முடியும் காட்சிகளும் நடைபெறவுள்ளது.
இன்று இரவு நடைபெறவிருக்கும் மயில்கட்டுத் திருவிழாவை முன்னிட்டு ஆடியார்கள் நலன்கருதி விசேட ஒழுங்கு நடைமுறைகள் ஆலயத்தில் செய்யப்பட்டிருக்கின்றது. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம் தனது பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏறாவூர்ப்பற்று பொலிஸ் பிரிவு வீதி ஒழுங்குகள் அத்துடன் ஆடியார்களின் நலன்கருதி பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபடுத்தபட்டிருக்கின்றனர். அத்துடன் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் மக்களின் நலன்கருதி வாகன போக்குவரத்து இலங்கை போக்குவரத்து சபையினால் ஒழுங்குகள் செய்யப்படடிருக்கின்றன. அத்துடன் வாகன தரிப்பிட வசிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் வருகின்ற பக்தர்களின் நலன்கருதி சித்தாண்டி அன்னதானச்சபையினரால் அன்னதானம் வழங்கப்பட்வுள்ளது. மற்றும் முதலுதவி சிகிச்சை நிலையம், சுகாதார பரிசோதகர் நிலையம் என்பன ஒழுங்குசெய்யப்பட்டு கடமையில் ஈடுபடுத்தப்படுத்தப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மயில் கட்டுத்திருவிழாவைக்காண வருகின்ற பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி நடாத்துவதற்கு சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவர் தொண்டர் படையணி கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மற்றும் ஏனைய சேவைகளும் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இன்று இரவு நடைபெறவிருக்கும் மயில் கட்டு விசேட திருவிழாவை முன்னிட்டு கலை நிகழ்வுகளும் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றன.