ஏறாவூர்பற்று பிரதேச செயலகம் 'தேசிய உற்பத்தி திறன் விருது' பெற்றதையிட்டு அமோக வரவேற்பு நிகழ்வு (வீடியோ)

(சித்தாண்டி நித்தி)  ஏறாவூர்பற்று பிரதேச செயலகம் தேசிய உற்பத்தி திறன் அபிவிருத்திக்கு தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப்பெற்று ஏறாவூர்பற்று பிரதேச செயலகம் பெருமை சேர்த்துள்ளததையிட்டு இன்று (5) வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்து கொண்டாடும் முகமாக வரவேற்பு நிழ்வு பிரதேச செயலக ஊழியர்களினால் பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது.

நிகழ்வில் அதிதிகள் வரவேற்க்கப்பட்டதுடன் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களினால் நினைவு கேக் வெட்டதும், தேசிய ரீதியில் தேசிய உற்பத்தி திறன் விருது கிடைத்ததையிட்டு அவைருக்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்நிழ்வுக்கு ஏறாவூர்பற்று பிரதேசத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருப்பதை காணலாம்.