செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தினால் வசதி குறைந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் முயற்சியினால் குறித்த பிரதேசத்தில் உள்ள வறியமாணவர்கள் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவிகள் வருடா வருடம் வழங்கப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் 2015ம் ஆண்டு பாடசாலைக்குச் செல்லவுள்ள வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (01.01.2015) காலை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் நடைபெற்றது.
இன்நிகழ்வில் சுமார் 200 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் புதுவருடத்திற்கான பால்சோறு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் அவர்கள் வருடத்தின் ஆரம்பத்தை கல்விக்கான உதவித்திட்டங்களுடன் ஆரம்பிப்பதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்ததுடன் செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வறியமாணவர்கள் அனைவருக்கும் உதவிகளை செய்வதற்கு நாங்களும் எமது சமூகமும் தயாராக இருக்கின்றது. எனவே மாணவர்கள் அனைவரும் சிறப்பாக கல்விகற்று வாழ்க்ககையில் முன்னேற வேண்டும். வறுமையை ஒழிப்பதற்கான ஒரே ஆயுதம் கல்விதான் என்பதை மாணவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த கல்வியின் ஊடாக நீங்களும் உங்களது குடும்பமும், நீங்கள் வாழும் சமூகமும் எதிர்காலத்தில் வறுமையற்ற சமூகமாக மாற்றமடைய வேண்டும் என்றால் மாணவர்களாகிய நீங்கள் எக்காரணம் கொண்டும் கல்வியை கைவிடக் கூடாது என்றார். அத்துடன் குறித்த பாடசாலை உபகரணங்களை வழங்கிய செங்கலடி வர்த்தகர்களுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன் இது போன்ற உதவிகளை செய்வதற்கு பிரதேசத்தில் உள்ள அனைவரும் முன்வரவேண்டுமெனவும் அழைப்புவிடுத்தார்.
இன்நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களும், உதவி பிரதேச செயலாளர் திருமதி. முகுந்தன் அவர்களுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.