அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் உள்ள கற்பிணிதாய்மார்கள், மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 20000 (இருபதாயிரம்) ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டதற்கு அமைய தற்போது பத்து மாதங்களுக்கான 2000 ரூபாய் பெறுமதியான போசாக்கு பொதிகளை பிரதேச செயலக மட்டத்தில் வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கற்பிணிதாய்மார்கள், மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கான போசாக்கு பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று(09) காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் முதல் கட்டமாக 140ற்கும் மேற்பட்ட கற்பிணிதாய்மார்கள், மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கான 2000 ரூபாய் பெறுமதியான போசாக்கு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சுமார் 840 கற்பிணிதாய்மார்கள், மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கு குறித்த போசாக்கு பொதிகள் வழங்கிவைக்கப்படவுள்ளன.
இன்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், ஏறாவூர் பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி முகுந்தன், ஏறாவூர் பற்று பிரதேச கணக்காளர் டேவிட், முன்பிள்ளை பருவ மாவட்ட இணைப்பாளர் என்.முரளிதரன், பொதுச் சுகாதார தாதிய சகோதரி திருமதி தேவகி ஜெயகரன், மேற்பார்வை குடும்பநல மருத்துவ மாது திருமதி. வினோதினி ரவிச்சந்திரன், குடும்பநல மருத்துவ மாது கந்தையா சசிகலா, குடும்பநல மருத்துவ மாது கந்தசாமி காந்தமலர், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சர்ஜீன், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் டீ.ஜெயசாந்தினி மற்றும் ஆகியோர் கலந்துகொண்டு தாய்மாருக்கான போசாக்கு பொதிகளை வழங்கிவைத்தனர்.