மட்டு திக்கோடையில் தொடரும் காட்டுயானைகளின் அட்டகாசம்.

(paluvooraan) மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை 50 வீட்டுத்திட்டத்தில் இன்று(04.10.2015) அதிகாலையில் அமுதலிங்கம் ஜெயந்தினி  என்போரின் வீட்டினை முற்றாக சேதமாக்கி மரவள்ளி தோட்டத்தினையும் நாசமாக்கி விட்டு சென்றுள்ளது.


அண்மையில் இதே கிராமத்தில் ஒருவரை இதே காட்டு யானைகள் பலியாக்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அதிகாரிகள் அசமந்தப்போக்காக செயற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் இச்சசெயற்பாடுகள் குறித்து உரிய அதிகாரிகள் கவனம் எடுக்காமை கவலையளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.






அண்மையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம்