கட்டார் ரியாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளில் மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதாக தெரிவித்து, வளைகுடா நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்துள்ள நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக வேலை நிமித்தம் கட்டார் சென்று நாடு திரும்பும் இலங்கையர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் உள்ள விற்பனை நிலையங்களிலும் கட்டார் ரியாலை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கட்டாரில் இருந்து வந்துள்ள இலங்கையர்கள் கவலை வெளியிட்டுள்ளன.
எனினும், இலங்கை முழுவதும் இவ்வாறு கட்டார் ரியாலை மாற்ற முடியாது என்று இலங்கை அரச தரப்பில் இருந்து எவ்வித செய்திகளும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.jpg)

.jpg)