மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட திக்கோடை – வாழைக்காலை வீதியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது தாந்தாமலை முருகன் ஆலய உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் போராதீவுப்பற்று பிரதேசத்தில் இருக்கும் மக்கள் இந்த வீதியூடாகவே தாந்தாமலைக்கு சென்றுவருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த வீதி நீண்டகாலமாக மிகவும் மோசமான நிலையில் இருப்பதன் காரணமாக, குறித்த வீதியை திருத்தும் பணிகளை போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி முன்னெடுத்து வருகின்றார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் உதவியுடன் புனரமைப்பு பணிகள் இன்று(புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த வீதியின் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் போரதீவுப்பற்று பிரதேசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நீண்ட காலமாக இந்த வீதியை புனரமைப்பு செய்வதற்கு எவரும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பிரதேச சபையின் வளங்களைக் கொண்டு இந்த வீதியை புனரமைக்கும் பணிகளை தவிசாளர் முன்னெடுத்துள்ளார்.

.jpg)

.jpg)