திக்கோடை ஸ்ரீ அம்பாறைப் பிள்ளையார் ஆலய எண்ணெய்க் காப்பும் மஹா கும்பாபிஷேகமும்



மட்டக்களப்பு திக்கோடை ஸ்ரீ அம்பாறைப் பிள்ளையார் ஆலய பஞ்சகுண்ட பட்ஷ அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனக் கிரியைகள் 01.09.2018 சனிக்கிழமை ஆரம்பமாகி 05.09.2018 புதன்கிழமையன்று மஹா கும்பாபிஷேகம் இடம்பெற இருக்கின்றது.

ஆலயத்தின் எண்ணெய்க் காப்பு சாற்றும் நிகழ்வு 04.09.2018 செவ்வாய்க்கிழமை இடம்பெற இருப்பதனால் சுவாமி தரிசனம் பெற்று எண்ணெய்க் காப்பு சாற்றும்  வேண்டுதலை நிறைவேற்றும் அடியார்கள் கலந்து கொள்ள முடியும்.

கும்பாபிஷேக நிகழ்வின் இரண்டாவது நாளான இன்று ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் மக்கள் தரிசிப்பதற்காக கிராமத்தின் இடங்கள் எங்கும் ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு மக்களால் வழிபடப்பட்டது.

கிரியைகளின் பிரதிஷ்டா பிரதம குருவாக சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் அவர்கள் கடமையாற்றுகின்றார்.