மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திக்கோடை, விவேகானந்தபுரம், றாணமடு கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட அரச காணிகளில் சுமார் 81 பயனாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் அடிக்கல் நாட்டும் நிகழ்வு (05) புதன்கிழமை நடைபெற்றது.
பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் சிரேஸ்ர ஆலோசகரும் பிரதேச அபிவிருத்திகுழு இணைத்தலைவரும் எஸ்.கணேசமூர்த்தி, போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி, மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் கே.ஜெகநாதன்
மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் SPG 2020 போரதீவுப்பற்று இணைப்பாளர் எம்.கோகிலராஜ் IUM நிறுவனத்தின் தலைவர் றிசாம் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி AAAN.டயஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் கிராமசேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் அகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


























.jpg)

.jpg)





