சரவணன்;;--
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா வேடர்குடியிருப்பு பிரதேசத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்க கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலை தாளங்குடா கடற்கரை பகுதியையண்டிய வேடர்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் முற்றாக எரிந்த நிலையில் மண்டை ஓடு மற்றும் எலும்பக்கூடு கொண்ட சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்
மீட்கப்பட்ட சடலம் 60 வயதுடைய பெண் ஒருவர் எனவும்; இன்னமும் அடையாளம் காணப்படவில்லையெ பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேல திக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.






.jpg)
.jpg)

.jpg)



