
தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் 20.04.2019 சனிக்கிழமை விளையாட்டுக் கழகத் தலைவர் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது. தமிழரது பாரம்பரியத்தினை வெளிக்கொணரவும், கிராம மக்களின் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியினை மேம்படுத்தும் பொருட்டும் புத்தாண்டு விளையாட்டுக்கள் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்றன.
மரதன் ஓட்டம், மெதுவான சைக்கிள் ஓட்டம், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், தலையணை அடித்தல், வழுக்குமரம் ஏறுதல், கிடுகு பின்னுதல், மாவூதிக் காசெடுத்தல், தேங்காய் திருவுதல், கம்பு சுத்துதல், போன்ற பல விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் இப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.















































.jpg)
.jpg)


.jpg)


