பொதுமக்களுக்கு உச்சபயனை அமைச்சர் சஜித் பிரேமதாஸ பெற்றுக்கொடுத்துள்ளார் ; ரணில் விக்ரமசிங்க



வீடமைப்பு அபிவிருத்திக்காக அரசாங்கம் ஒதுக்கிய நிதி ஒதுக்கீடுகளை சிறந்த முறையில் பயன்படுத்தி பொதுமக்களுக்கு உச்சபயனை அமைச்சர் சஜித் பிரேமதாஸ பெற்றுக்கொடுத்துள்ளார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 40ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நேற்று காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அங்கு உரையாற்றுகையில் , வீடற்ற மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் கூடுதல் அரப்பணிப்பு செய்த ஒரு தலைவராக முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸவை குறிப்பிட முடியும் என்று தெரிவித்தார்.