
'மாணவர் சமய நிழல்' அறநெறிப் பாடசாலை கட்டடத் திறப்பு விழா இன்று மட்டக்களப்பு தாழங்குடாவில் அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் திறந்துவைக்கப்பட்டது.
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் 'மாணவர் சமய நிழல்' எனும் தொனிப்பொருளில் நாடு பூராகவும் நிர்மாணிக்கப்பட்டு வரும் அறநெறி பாடசாலைகளுக்கான கட்டிட திறப்பு விழா இன்று (03.08.2019) மட்டக்களப்பு தாழங்குடாவில் இடம்பெற்றது.
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடா பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ விநாயகர் அறநெறிப்பாடசாலையின் புதிய கட்டட திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் கலந்து கொண்டதுடன், அமைச்சரினால் மாணவர்களின் பாவனைக்காக இவ் அறநெறிப்பாடசாலை திறந்துவைக்கப்பட்டது.
அறநெறி பாடசாலை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் நான்கு மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அறநெறி பாடசாலை கட்டடத் திறப்பு விழாவிற்கு மாவட்ட அரசியல் பிரமுகர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி மற்றும் அரச உயரதிகாரிகள் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
































.jpg)
.jpg)

.jpg)



