தரம் 5 மாணவர்களுக்கான இலவச வகுப்புக்கள் ஆரம்பம்



கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த ஆண்டுகளைப் போன்று இவ்வாண்டும் 2020இல் தரம் 5 புலமைப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தால்(EDS) அமுல்படுத்தப்படும் மேற்படி திட்டத்திற்கான நிலையறி பரீட்சை 07.09.2019 பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், மண்முனைப் பற்று பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம், தாழங்குடா ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயம், மண்முனை வடக்கு பிரதேசத்தில் ஊறனி சரஸ்வதி வித்தியாலயம், நாவலடி நாமகள் வித்தியாலயம், மற்றும் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஏறத்தாழ 1600 மாணவர்கள் இப் பரீட்சையில் பங்குபற்றினர். நிலையறி பரீட்சையைத் தொடர்ந்து வார இறுதி நாட்களில் இலவச வகுப்புக்களும், மாதந்தோறும் பயிற்சிப் பரீட்சைகளும் நடாத்தப்படவுள்ளது.

ஊறனி சரஸ்வதி வித்தியாலயம், நாவலடி நாமகள் வித்தியாலயம், கல்வி அபிவிருத்திச் சங்கம், புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம், தாழங்குடா ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயம் என்பவற்றில் வார இறுதி நாட்களில் வகுப்புக்களும், மாதாந்த பயிற்சிப் பரீட்சைகளும் தொடர்ந்து 10 மாதங்கள் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேற்படி கல்வி வலயத்தில் மாதாந்த பரீட்சையும் தொடர் கருத்தரங்குகளும் நடைபெறும். இதற்கான நிதியுதவியினை கனடா வதியும் பாலசுப்பிரமணியம் விமலநாதன், பாக்கியராஜா கமலநாதன், சின்னத்துரை சாந்திக்குமார், சாள்ஸ் நிமலராஜன், பாலசுப்பிரமணியம் நேசராசா ஆகியோர் வழங்க முன்வந்துள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தரம் 5 மாணவர்கள் சகலருடன் கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயம், புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம், தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயம், தாழங்குடா RCTMS , மாவிலங்குதுறை GTMS , கொக்குவில் விக்கினேஸ்வரா வித்தியாலயம், மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம், நாவலடி நாமகள் வித்தியாலயம், புளியடிமுனை GTMS, பிள்ளையாரடி நல்லையா வித்தியாலயம், திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலயம், பாலமீன்மடு விக்கினேஸ்வரா வித்தியாலயம், அமிர்தகழி சித்தி விநாயகர் வித்தியாலயம், மட்டிக்களி GTMS, திராய்மடு, நாவற்கேணி, கருவப்பங்கேணி விபுலானந்தா ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் பெரும் நன்மையடைவார்கள் என நம்பப்படுகிறது.