இலங்கையின் கல்வி வரலாறானது மிக நீண்ட வரலாற்றுத் தன்மையை கொண்டது. கல்வி முறைமைகளும் அதன் கலைத்திட்ட முறைமைகளும் காலத்துக்கு காலம் மாற்றமடைந்தும், வளர்ச்சி அடைந்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் கல்வியின் இலக்குகளில் பிற்காலத்தில் திறனாய்வு, மனப்பாங்கு, சுய முகாமைத்துவம், விழுமியப்பண்புகளுடனான முகாமைத்துவ செயற்பாடுகள், நவீன தொழில்நுட்ப கல்வி முதலிய விடயங்களும் முக்கியமான தொனிப்பொருளாக விளங்கின.
இவ்வாறான வினைத்திறன் மிக்க விடயங்களை விருத்தி செய்யும் வகையில் தேசிய கல்வி ஆணைக்குழுவினால் 1992 இல் வெளியிடப்பட்ட அறிக்கையில் கல்விக்கான இலக்குகள் குறித்தும் 2003 இல் கல்வி இலக்குகளை அடைவதற்கான ஏழு வகையான தேர்ச்சிகள் குறித்தும் பரிந்துரைக்கப்படிருந்தது. தேர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை உரியவாறு முறையில் பயன்படுத்தும் திறன் எனப்படுகின்றது. கல்விக்கான தேர்ச்சிகளாக தொடர்பாடல் தேர்ச்சிகள், ஆளுமை தேர்ச்சிகள், சூழல் தொடர்பான தேர்ச்சிகள், வேலை உலகிற்குத் தயாராகுதல் தொடர்பான தேர்ச்சிகள், சமயமும் ஒழுகலாறும் பற்றிய தேர்ச்சிகள், ஒய்வு நேரத்தை பயன்படுத்தல் தொடர்பான தேர்ச்சிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டும் என்பதே கல்வியின் மிக பெரிய எதிர்பார்ப்பாகவும் குறிக்கோளாகவும் காணப்படுகிறது.

எனினும் இன்று பெரும்பாலான பாடசாலைகளில் கல்வித்தேர்ச்சிகள் முழுமையாகக் கையாளப்படுகின்றனவா என்பது கேள்விக்குரிய விடயமாகவே காணப்படுகின்றது. வெறும் ஏட்டுக் கல்வியையும் பரீட்சையையும் மாத்திரமே கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் முன்னெடுத்துச் செல்கின்றமையினை இன்றும் சில பாடசாலைகளில் காணமுடிகின்றது. இதன் காரணமாக தேர்ச்சிகள் பற்றிய தெளிவானது மாணவரக்ளிடையே பெறப்பட வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது.
தொடர்பாடல் தேர்ச்சிகள் கற்றல், கற்பித்தல் முறையில் முக்கிய இடம்பெறுகின்றன. இத்தேர்ச்சியில் எழுத்தறிவு, எண்ணறிவு, சித்திர அறிவு, தகவல் தொழில்நுட்பத்தன்மை என்பன அடங்குகின்றன. கற்றல், கற்பித்தலில் ஆசிரியர் மாணவர்களுக்கு இடையில் தொடர்பாடல் என்பது முக்கியமான விடயமாகிறது. சிறந்த தொடர்பாடலே சிறந்த கல்வி அபிவிருத்தியை ஏற்படுத்துகிறது. இன்றைய கற்பித்தல் முறையில் தொடர்பாடல்சார் தேர்ச்சியானது முதன்மை நிலையைப் பெறுவதோடு பெரும்பாலான பாடசாலைகளில் முறையாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை சில பாடசாலைகளில் இத்தேர்ச்சிகளுக்கான நிலையானது சற்று மந்தமாகவே காணப்படுகின்றது.

ஆளுமை விருத்தி தொடர்பான தேர்ச்சி என்பது மாணவர்களிடையே ஆக்கம், தற்துணிவு, சுயமாக தீர்மானம் எடுக்கும் திறன், விரிந்த சிந்தனை முதலிய திறமைகளை வெளிப்படுத்த உதவும் தேர்ச்சி முறையாகும். அத்துடன் சுற்றாடல் தொடர்பான தேர்ச்சி என்பது சமுதாயச் சூழல், உயிரியல் சூழல், பௌதீக சூழல் பற்றி அறிதல் ஆகும். இதனால் ஒவ்வொரு மாணவனும் கல்வியினால் தான் வாழும் உலகின் தன்மை பற்றி அறிய வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. சமயம் மற்றும் ஒழுகலாறுகள் தொடர்பான தேர்ச்சியில் அன்றாட வாழ்வில் மிக பொருத்தமானவற்றை தெரிவு செய்யவும் நாளாந்த வாழ்கையில் ஒழுக்கவிருத்தி, சமயநெறி முதலிய நடத்தைகளை பொருத்தமுற பின்பற்றவும், சிறந்த விழுமிய பண்புகளை தம்வசப்படுத்திக் கொள்ளவும் உள்வாங்கவும் துணைப்புரிகிறது. அழகியற் கலைகள், இலக்கியம் விளையாட்டு முதலிய பல்வேறு துறைகளில் பிரகாசிப்பதற்கான திறன்களை வளர்க்க வேண்டும் என எடுத்துரைக்கின்றது. அத்துடன் வேலை உலகிற்குத் தயாராகுதல் தொடர்பான தேர்ச்சியானது இன்றைய கல்வி முறையில் பரீட்சையை மட்டும் மையப்படுத்தியதாக அன்றி தொழிற் கல்வியை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என்கிறது. கற்றலுக்கான தேர்ச்சியானது விரைவாக மாறுகின்ற உலகில் ஒருவரில் ஒருவர் தங்கி நிற்கின்ற நிலையில் ஒருவர் சுயாதீனமாகக் கற்பதற்கான வலிமையளித்தலும் மாற்றியமைக்கும் செயன்முறையினால் மாற்றத்திற்கேற்ப இயங்கவும் தயார்படுத்தல் என்பவற்றைச் சுட்டி நிற்கின்றது.
இவ்வாறான தேர்ச்சிகளின் வாயிலாக முன்னேற்றமடைந்த ஒரு கல்வி கற்ற சமுதாயம் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இன்றைய நிலையில் சில பின்தங்கிய பாடசாலைகளில் கற்றலின் போது கருத்துப் பொதிந்த வாசிப்பு சிறந்த தொடர்பாடல் ஆளுமைகள் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்குகொள்வதற்கான வாய்ப்புக்கள் நவீன தொழில்நுட்பக்கருவிகளை பயன்படுத்துவதற்கான அறிவு தொழிற்கல்விக்கான பயிற்சி முதலிய விடயங்கள் ஓரளவிலேயே கிடைக்கப்பெறுகின்றன. அத்துடன் சில பாடசாலைகளில் காணப்படும் கற்றல் கற்பித்தல் உபகரணங்களுக்கான குறைபாடுகள், சிறந்த பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்மை, வளப்பற்றாக்குறை, முகாமைத்துவ செயற்பாட்டாளர்களின் அசமந்தப்போக்கு எனப் பல இடர்பாடுகள் காரணமாக கல்விக்கான இலக்குகளை அடைவதில் சில பாடசாலைகள் பின்நிற்கின்றன. இத்தகைய கல்வித் தேர்ச்சிகள் அடையப்பெறாதவிடத்து மாணவர்கள் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்க மறுத்தல், பிரச்சினைகளுக்கு உரிய முறையில் முகங்கொடுக்க முடியாமை, கற்றலில் மட்டும் கவனஞ்செலுத்தி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆற்றலைப் பெற்றுக்கொள்ள முடியாமை முதலிய விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' எனும் கருத்துக்கமைய ஒவ்வொரு மாணவனுக்கும் வெறும் ஏட்டுக் கல்வி மட்டும் புகட்டுதல் போதாது. அனுபவரீதியாகவும் செயற்பாட்டுரீதியாகவும் கல்வி வழங்கப்படல் வேண்டும். மனப்பாடம் செய்வித்தலை தவிர்த்து விளங்கிக் கற்றல் முறையினை ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியர் மையக்கல்வியை குறைத்து மாணவர் மையக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். இன்றைய நிலையில் நவீன தொழில்நுட்ப சாதனங்களைக் கையாள்வதற்கான பயிற்சி முறைகள் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் முதலிய இடங்களில் வழங்கப்படுகின்றன. அது மட்டுமன்றி கல்வி மூலம் நிறைவேற்றப்படுகின்ற விடயங்களாக சமனான ஆளுமை விருத்தி, விழுமிய விருத்தி, அறிவு, திறன், மனப்பாங்கு விருத்தி, சமூகமயமாக்கல் விருத்தி, தன்னை விளங்கிக் கொள்வதற்கான பயிற்சி, சமாதானத்தை விரும்பி வாழ்வதற்கான பயிற்சி, வாழ்க்கை முழுவதும் நீடித்த கல்விக்கான பயிற்சி என்பன அமைகின்றன. இன்றும் இலங்கையில் கல்வி அபிவிருத்திக்கென பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறாக பாடசாலைகளில் கல்வித் தேர்ச்சிகள் முழுமையாக அடையப்படும் போதே சிறந்த மாணவர் சமுதாயமொன்று உருவாகுவதோடு கல்வி இலக்குகளும் உயர்நிலையில் அடையப்படும் என்பதில் எவ்வித தடையும் இல்லை.
செல்வரத்னம் லக்ஸ்மி
இரண்டாம் வருட சிறப்புக்கற்கை மாணவி
கல்வி பிள்ளைநலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்.
இரண்டாம் வருட சிறப்புக்கற்கை மாணவி
கல்வி பிள்ளைநலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்.