கதிர்காமம் எசல பெரஹெர உற்சவத்தில் குழம்பிய யானை ! பலர் வைத்தியசாலையில் அனுமதி !


கதிர்காமம் எசல பெரஹெர உற்சவத்தின் முதல் நாள் உற்சவம் நேற்று நடைபெற்ற நிலையில், பெரஹெர உற்சவத்தில் பங்குபற்றிய யானை ஒன்று குழம்பியுள்ளது.

இதையடுத்து, பெரஹெர உற்சவத்தில் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பாரதூரமான பாதிப்புக்கள் இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.