மினுவாங்கொடை நகரில் முடி சிகிச்சையினால் முடி உதிர்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் உள்ள சலூனுக்கு பெண் ஒருவர் தனது தலைமுடியை சரிசெய்வதற்காக சென்றிருந்தார். அவருடைய தலைமுடியில் சில பொருளைப் பயன்படுத்திய பிறகு, தலைமுடி விழத் தொடங்கியுள்ளது. ஊழியர்களிடம் புகார் அளித்ததையடுத்து அவர்கள் உரிமையாளருடன் சலூனை விட்டு வெளியேறியுள்ளனர்.
சலூன் உரிமையாளர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.