இ.போ.ச பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து ; பெண் பலி ; குழந்தை உட்பட இருவர் படுகாயம் !


பண்டாரவளை - பல்லேவெல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தையும் மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்துள்ளனர்.

65 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த குழந்தையும் பெண்ணும் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.