வெளிநாட்டு மதுபான போத்தல்கள், சிகரட்டுகளுடன் பெண் ஒருவர் கைது !


சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் சிகரட்டுகளுடன் பெண் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஜா - எல, கொட்டுகொட பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரான பெண்ணிடமிருந்து 17 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் 40 ஆயிரம் சிகரட்டுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரான பெண் இந்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் சிகரட்டுகளை விற்பனை செய்ய தயாராக இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.