கட்டாக்காலி மாடுகளினால் அதிகளவான விபத்துக்கள்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சம்பவம்

(பாறுக் ஷிஹான்)


கட்டாக்காலி மாடுகளினால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் காலை முதல் மாலை வரை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

அண்மையில் கூட சம்மாந்துறை விளினியடி சந்தியில் மாடுகளால் விபத்து ஏற்பட்ட முச்சக்கரவண்டி சேதமடைந்ததுடன் சாரதி காயமடைந்திருந்தார்.

இது தவிர இன்று மோட்டார் சைக்கிள்கள் இரண்டுடன் கட்டாக்காலி மாடுகள் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள்களை செலுத்தி வந்த இருவரே கை மற்றும் கால்களில் காயமடைந்த நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.