ஏறாவூர் நீதிமன்றினுள் சிறைச்சாலை கைதி ஒருவர் தூக் கி ட்டு த ற் கொலை









(செங்கலடி நிருபர் சுபஜன்)

சிறைக்கைதியொருவர் ஏறாவூர் நீதிமன்றில் கழுத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று . இன்று 26.09.2025 மதியம் பதிவாகியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் தன்வசம் வைத்திருந்தமை மற்றும் களவு தொடர்பாக இவருக்கெதிராக ஏழு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு; விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டிருந்தார்.

இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகளின் பிரகாரம் இவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டிருந்ததது.

இந்நிலையில் நீதிமன்ற சிறைக்கூட மலசல கூடத்திற்குச் சென்ற இவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் அணிந்திருந்த சாரனின் ஒருபகுதியைக் கிழித்து ஜன்னலில் கட்டி மற்றைய பகுதியை கழுத்தில் கட்டி தொங்கிய நிலையில் சடலம் காணப்பட்டுள்ளது.

மலசல கூடத்திற்குச் சென்ற மற்றுமொரு நபர் சடலம் தொங்கியதை அவதானித்து பொலிஸாருக்கு அறித்துள்ளார்.

இதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸார் நீதிமன்றிற்கு வருகை தந்ததுடன் தடயங்களைச் சேகரித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்தியதிகாரி சடலத்தைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்தார்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றின் பதில் நீதிபதி வீ.தியாகேஸ்வரன் சம்பவ இடத்தை நேரடியாகப்பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.