2026 - 6ஆம் தரத்துக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு !


கல்வி அமைச்சினால் 2025 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டு 6 ஆம் தரத்திற்கு பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெள்ளிக்கிழமை (21) வெளியிடப்பட்டன.

தமிழ் மொழிமூலம் – ஆண்களுக்கான பாடசாலைகள்

றோயல் கல்லூரி - 171, சிஃ டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி 152, புனித அன்ரனிஸ் கல்லூரி 146, இசிபத்தான கல்லூரி 146, ஹாட்லி கல்லூரி 145, புனித ஜோன் போஸ்கோ கல்லூரி (ஹட்டன்) 143, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி 139, சாஹிரா கல்லூரி 138, இந்து கல்லூரி (கொழும்பு) 134, சரஸ்வதி மத்திய கல்லூரி (பதுளை) 132, ஓட்டமாவடி மத்திய கல்லூரி 132, மட்டக்களப்பு புனித மைக்கேல்ஸ் கல்லூரி 132, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 132, மெதடிஸ்ட் மத்திய கல்லூரி (மட்டக்களப்பு) 132, காத்தான்குடி மத்திய கல்லூரி 132, சாஹிரா தேசியப் பாடசாலை (புத்தளம்) 131, கிண்ணியா மத்திய கல்லூரி 131 என வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ் மொழிமூலம் – பெண்களுக்கான பாடசாலைகள்

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி 156, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி 149, புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம் 149, யாழ் வேம்படி மகளிர் உயர் பாடசாலை 145, கொழும்பு பாத்திமா முஸ்லிம் லேடீஸ் கல்லூரி 144, கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி 143, ஹட்டன் புனித கேப்ரியல் மகளிர் கல்லூரி 140, மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர் பாடசாலை 139, கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி 138, காத்தான்குடி மீரா மகளிர் மகா வித்தியாலயம் 136, சம்மாந்துறை அல்- மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி 136, ஓட்டமாவடி பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம் 135, மாத்தளை அமீனா மகா வித்தியாலயம் 135, கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி 133, பருத்தித்துறை மெதடிஸ்ட் மகளிர் உயர் பாடசாலை 132, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி 132, வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி 132, மட்டக்களப்பு சிசிலியாஸ் மகளிர் கல்லூரி 132, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி 132 என வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ் மொழிமூலம் – கலவன்ஃஏனைய பாடசாலைகள்

ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி 158, கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி 146, சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் 145, அக்கறைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி 144, தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் 143, பொகவந்தலாவை புனித மேரீஸ் மத்திய கல்லூரி 143, நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் 142, ஹாலிஎல ஊவா விஞ்ஞானக் கல்லூரி 141, களுவாஞ்சிக்குடி பாதிரிப்பு மத்திய கல்லூரி 139, மஸ்கெலியா புனித ஜோசப் தமிழ் வித்தியாலயம் 138, அக்குரனை அஸ்ஹர் மத்திய கல்லூரி 138, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி 137, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் 137, கல்முனை கார்மேல் பட்டிமா கல்லூரி 137, கலேவெல அல் - புர்கான் மத்திய கல்லூரி 135, மூதூர் மத்திய கல்லூரி 135, அக்கரைப்பற்று முனவ்வரா ஜூனியர் கல்லூரி 135, ஒலுவில் அல்-ஹம்ரா மகா வித்தியாலயம் 135, வாழைச்சேனை இந்து கல்லூரி 134, மாதவல மதீனா தேசியப் பாடசாலை 134, மாவனல்ல சாஹிரா கல்லூரி 134, கொக்குவில் இந்து கல்லூரி 134, கம்பளை சாஹிரா தேசியக் கல்லூரி 134, குருணாகல் கெகுனகொல்ல தேசியப் பாடசாலை 134, அக்கரைப்பற்று அஸ்-சிராஜ் மகா வித்தியாலயம் 133, கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் 132, தௌ;ளிப்பலை மகாஜனக் கல்லூரி 132, சாவகச்சேரி இந்து கல்லூரி 132, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் 132, அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி 132, ஹப்புகஸ்தலாவ அல் மின்ஹாஜ் தேசியப் பாடசாலை 132, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி 132 மற்றும் நிந்தவூர் அல்-அஷ்ரக் மத்திய மகா வித்தியாலயம் 132 என வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.