மட்டக்களப்பு - கல்முனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு !


மட்டக்களப்பு - கல்முனை வீதியில் ஆரையம்பதிப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மட்டக்களப்பு திசை நோக்கி பயணித்த லொறி ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த பாதசாரி சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத போதிலும், அவர் அப்பகுதியில் இருந்த யாசகர் எனத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்