அறுகம்பை பகுதியில் வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விசாரணை!


பொத்துவில் அறுகம்குடா பகுதியில் வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பெண் ஒருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அறுகம்குடா பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் குறித்த வெளிநாட்டு பெண்ணிடம் தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து பாலியல் சேட்டையில் ஈடுபடும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.

பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண் இது தொடர்பில் கடிதம் ஊடாக பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பெண் ஒருவரே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.