கணவர் தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பட்டம் பெற்றவர் எனவும், மனைவி தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் உளவியல் டிப்ளோமா பட்டம் பெற்றவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வெள்ளிக்கிழமை (08) ராஜகிரியவில் உள்ள வீடொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த தம்பதி மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் வசித்து வந்துள்ளதோடு, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கீழ் தளங்களில் வசித்து வந்துள்ளனர்.
குறித்த தம்பதியினால் பிரித்தானிய இணையத்தளம் ஒன்றில் 334 ஆபாச காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பரில் அவர்கள் வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்ததுள்ளனர். அதன்படி, அவர்கள் மாதத்திற்கு எட்டு வீடியோக்களை வழங்க வேண்டும். மாதந்தோறும் ரூ.150,000 முதல் ரூ.200,000 வரை சம்பாதித்ததாகவும், பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிக பணம் செலுத்தப்பட்டதாகவும் தம்பதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இருவரும் வேலை இன்மையால் நிதி நெருக்கடியை சந்தித்ததன் பின்னர், இந்த காணொளிகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இலங்கைக்குள் இந்த இணையத்தளம் அணுக முடியாமல் இருந்தமையினால் தங்கள் அடையாளங்களை எவரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என தம்பதியினர் நம்பினர் இருந்தனர்.
தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) கொழும்பு அளுத்கம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.











.jpeg)
