சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை 500 ஆக அதிகரிக்கத் திட்டம் !


நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவையை 500 ஆக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுவசெரிய இலவச சேவையில் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களின் திறன்களை வளர்ப்பதற்கான விசேட பயிற்சி திட்டத்தில் பங்கேற்றபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்குத் தேவையான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள தொழில்நுட்பத்தை இணைத்து ஆம்புலன்ஸ் சேவையை புதுப்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது, தெரிவித்துள்ளார்.

மேலும் 100 ஆம்புலன்ஸ்களை வாங்குவதற்கு இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், மேலதிகமாக, ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவியின் கீழ் 20 ஆம்புலன்ஸ்கள் மற்றும் இலவசமாக மேலும் 25 ஆம்புலன்ஸ்களை பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.