வடமாகாணத்தில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு சுமார் 5 ஆயிரம் பெண் நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ் வசீகரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (13) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் விவசாய நிலங்களுக்குள் செல்லும் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அநேகமான பிரதேச சபைகள் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்காக பெண் நாய்களுக்கான கருத்தடைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் வடமாகாணத்தில் சுமார் 5 ஆயிரம் நாய்களுக்கான கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்து ஐநூறு பெண் நாய்களுக்கான கருத்தடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.







.jpeg)

.jpeg)

%20(1).jpg)

