மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து !


வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், தனமல்வில பொலிஸ் தலைமையகப் பிரிவுக்குட்பட்ட கித்துல்கோட்டை பிரதேசத்தில் இன்று (17) முற்பகல் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் பேருந்து, வேன் மற்றும் கார் ஆகியவை மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் யாருக்கும் பாரிய சேதம் ஏற்படவில்லை என்ற போதிலும், வாகனங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் தனமல்வில பொலிஸ் தலைமையகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.