பட்டிருப்பு கல்வி வலயத்தில் மட்/பட்/மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இல் எழுத்தறிவு மையம் திறந்துவைப்பு














(சித்தா)


பட்டிருப்புக்கல்வி வலயத்தில் மட்/பட்/மகிழழூர் சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இல் எழுத்தறிவு மையம் 21.11.2025 இன்று திறந்து வைக்கப்பட்டது. முறைசாராக்கல்வி இணைப்பாளர் றீற்றா கலைச்செல்வன் ஒழுங்கமைப்பில் வலயக்கல்விப்பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

 இதில் பாடசாலையின் பிரதி அதிபர் யுதர்சன், வழிகாட்டல் ஆலோசனை ஆசிரிய ஆலோசகர் பா.துஸ்யந்தன், செயற்றிட்ட உத்தியோகத்தர்களான அருந்ததி பாஸ்கரன், சிபோஜி சீவரெத்தினம், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 இந்திகழ்வில் எழுத்தறிவின் முக்கியத்துவம் பற்றி வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முறைசாராக்கல்வி இணைப்பாளரால் எழுத்தறிவு தினம் பற்றிய விழிப்புணர்வும் முன்வைக்கப்பட்டது, அத்துடன் எழுத்தறிவு மையத்துக்குத் தேவையான கற்றலுபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் எழுத்தறிவு மையத்தில் முறைசாராக்கல்விப்பிரிவால் நடாத்தப்பட்ட நிலையறி பரீட்சையில் எழுத்தறிவு, எண்ணறிவில் இடர்பாடுடடைய 25 மாணவர்கள் எழுத்தறிவு, எண்ணறிவு பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ளனர். அயற்பாடசாலைகளான மட்/பட்/மகிழூர்முனை சக்தி வித்தியாலயம், மட்/பட்/கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயம் ஆரம்பக்கல்வியில் எழுத்தறிவு, எண்ணறிவில் இடர்பாடுடைய மாணவர்களையும் இவ் எழுத்தறிவு மையத்தில் இணைத்து பயிற்சியினை வழங்கமுடியும்.