கண்டியில் வத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தளை - கண்டி வீதியில் பிடியேகெதர பகுதியில் பஸ்ஸில் ஏற முற்பட்ட நபரொருவர் பஸ்ஸிலிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் யட்டிராவன பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.
இவர் மாத்தளை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்றில் ஏற முற்பட்ட போது பஸ்ஸிலிருந்து கீழே தவறி விழுந்துள்ளார்.
காயமடைந்தவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




.jpg)







