கொமர்ஷல் வங்கி டிஜிட்டல் கொடுப்பனவுகளில் பிரபலமான கூகுள் மற்றும் விசா ஆகியவற்றுடன் இணைந்து, நாட்டில் முதன்முதலாகத் தனது வடிக்கையாளர்களுக்கு கூகுள் பே சேவையைச் சாத்தியமாக்கியுள்ளது.
கொமர்ஷல் வங்கி கூகுள் பே சேவையைச் செயல்படுத்திய இலங்கையின் ஒரே வங்கி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்த உலகத் தரத்திலான மொபைல் கட்டணத் தீர்வு மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முன்னோடி நன்மையினை (first-mover advantage) வழங்கியுள்ளது.
கூகுள் மற்றும் விசா கூட்டாண்மை, விசாவின் நம்பகமான உலகளாவிய கட்டண வலையமைப்பு, மேம்பட்ட டோக்கனீசேஷன் (Tokenization) தொழில்நுட்பம், கூகுளின் பாதுகாப்பான மற்றும் எளிமையான இடைமுகம் ஆகியவற்றை கொமர்ஷல் வங்கியின் வலுவான டிஜிட்டல் வங்கிச் சூழலுடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது.
பிரதான அம்சங்கள்
கொமர்ஷல் வங்கியின் விசா டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள், தற்போது தங்கள் அட்டைகளை கூகுள் வாலட்டில் (Google Wallet) இலகுவாகச் சேர்க்கலாம்.
ஒருமுறை கடவுச்சொல் (OTP) அல்லது அழைப்பு மையம் மூலம் சரிபார்த்து, தங்கள் அண்ரோய்ட் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி பாதுகாப்பான, தொடர்பு இல்லாத (contactless) கட்டணங்களைச் செலுத்த முடியும்.
எங்கு வேண்டுமானாலும் கட்டணம்: விசா கார்ட் ஏற்றுக்கொள்ளப்படும் உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் உள்ள NFC-வசதி கொண்ட (NFC-enabled) எந்தவொரு contactless-enabled Point-of-Sale (POS) கருவியிலும் ஸ்மார்ட்போனைத் தட்டுவதன் மூலம் பணம் செலுத்தலாம்.
அட்டை தேவையில்லை: அட்டை வைத்திருப்பவர்கள் இனி தங்கள் உடல் அட்டைகள் (physical cards) அல்லது பணத்தை எடுத்துச் செல்லத் தேவையில்லை. NFC-வசதி கொண்ட தங்கள் Android ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தித் தொட்டுப் பணம் செலுத்தலாம், இது பாதுகாப்பான மற்றும் எளிதான கட்டண அனுபவத்தை வழங்குகிறது.
கட்டணப் பாதுகாப்பு
கொமர்ஷல் வங்கி இந்த டோக்கனீசேஷன் சேவைக்காக மூன்றாம் தரப்பு சேவை வழங்குநரான IDEMIA உடன் மூலோபாய ரீதியாக இணைந்துள்ளதுடன், விசாவின் டோக்கன் சேவையை (Visa’s Token Service - VTS) பயன்படுத்துகிறது.
இந்தத் தொழில்நுட்பம், உண்மையான 16 இலக்க அட்டை எண்ணுக்குப் பதிலாக ஒரு தனித்துவமான டிஜிட்டல் டோக்கனைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம், பயனரின் முக்கியமான தரவுகள் வணிகர்களுடன் பகிரப்படாமல் அல்லது சாதனத்தில் சேமிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
இந்தக் கட்டணச் சேவையை அறிமுகப்படுத்த, வங்கியின் கார்ட் சுவிட்ச் விற்பனையாளரான Euronet இன் கட்டண உள்கட்டமைப்பை கொமர்ஷல் வங்கி பயன்படுத்தியுள்ளது. இது நம்பகமான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனை செயலாக்கத்தை உறுதி செய்கிறது.
கொமர்ஷல் வங்கியின் இந்த நடவடிக்கை, இலங்கையின் டிஜிட்டல் கட்டணச் சந்தையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.




.jpg)







