தேரர் போன்று காவி உடை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் கைது


தேரர் போன்று காவி உடை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரால் இன்று புதன்கிழமை (19) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி நபர்களிடமிருந்து பணத்தை பெற்று ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.