.jpg)
ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று மேல்மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (18) கைதுசெய்யப்பட்டுள்ளது.
மேல்மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கும்பல் கைதுசெய்யப்பட்டுள்ளது.
இந்த கும்பல் நீண்ட காலமாக ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



.jpg)







