அநுராதபுரம், ஹபரணை, ஜயசேன்கம பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த மசாஜ் நிலைய பெண் உரிமையாளர் ஹபரணை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (17) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹபரணை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான மசாஜ் நிலைய பெண் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான மசாஜ் நிலைய பெண் உரிமையாளரிடமிருந்து 4 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் நீண்ட நாட்களாக மசாஜ் நிலையத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




.jpg)







