களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிறுவர் பாதுகாப்பு மற்றும் சட்ட ஏற்பாடு கள் பற்றிய விழிப்புணர்வு


(ரவிப்ரியா)
சுய பாதுகாப்பு கொண்ட மாணவர் சமூகத்தை உருவாக்குதலை முன்னிலைப்படுத்தி கட்டிளமை பருவ மாணவர்களுக்கு சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு பரீட்சயில் A தர சித்திபெற்ற 197 மாணவர்களுக்கு 18/11/2025 செவ்வாயன்று சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு .உ.உதயஸ்ரீதர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன் அவர்களின் நெறிப்படுத்தலிலும் நடைபெற்றது. இந்நிகழ்வானது 3 அமர்வுகளை கொண்டதாக அமைந்திருந்தது.

முதல் நிகழ்வாக 'சிறுவர் பாதுகாப்பும் சட்ட ஏற்பாடுகளும்' என்னும் தலைப்பில் சட்டத்தரணி திருமதி றுமணன் சுபாஜினி சட்டத்தரணி சட்டமானி மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் அவர்களின் மூலம் அறிவூட்டல் செயலமர்வும், இரண்டாம் அமர்வாக பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கொண்டதாக அமைந்திருந்தது.

மண்முனை தென் எருவில் பற்று கோட்டத்திற்குட்பட்ட தரம் 10ல் கல்வி பயிலும் சகல பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு பரீட்சை கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.