அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் நடாத்திய 62 ஆவது பட்டமளிப்பு விழாவில் மட்டக்களப்பு மனோன்மணி தட்சணாமூர்த்திக்கு சைவப் புலவர் பட்டம் அளித்துக் கௌரவித்தனர். 23.11.2025 ஆம் திகதி கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதி மண்டபத்தில் சைவப் புலவர், சைவசித்தாந்த பண்டிதர் கார்த்திகேசன் கமலநாதன், தலைவர், அகில இலங்கை சைவப் புலவர் சங்கம், தலைமையில்
நல்லை சிவகுரு ஆதீனம் குருமா சந்நிதானம் தவத்திரு வேலன் சுவாமிகள் சிவஸ்ரீ.ச.சோமாஸ்கந்தக் குருக்கள், மயிலணி, சுன்னாகம், சிவஸ்ரீ.கு.தியாகராஜக் குருக்கள், பிரதமகுரு நீர்வை செல்லக் கதிர்காம ஆலயம், ஸ்ரீலஸ்ரீ.செ.கைலாயநாதக் குருக்கள், பிரதமகுரு, கரணவாய் மூத்த விநாயகர் தேவஸ்த்தானம் இவர்களின் திருமுன்னிலையில் பேராசிரியர் சிவஸ்ரீ.ம.பாலகைலாசநாதக் குருக்கள் தலைவர், சமஸ்கிருதத்துறை, இந்துக் கற்கைகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட இந் நிகழ்வில் இப் பட்டம் வழங்கப்பட்டது.


.jpeg)






.jpeg)





