
டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிச் சென்ற EK-434 ரக எமிரேட்ஸ் விமானம் வியாழக்கிழமை (20) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீரென நோய்வாய்ப்பட்டதை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், நோய்வாய்ப்பட்ட பயணி மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏர்பஸ் A380 ரக பெரிய அகலமான இந்த விமானம் இரவு 7.15 மணியளவில் கட்டுநாயக்கவில் தரையிறங்கி, பின்னர் இரவு 9.20 மணியளவில் பிரிஸ்பேனுக்குப் புறப்பட்டது.




.jpg)





