கொழும்பு பொது நூலகத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார எழுதிய 'போராட்டத்தின் போலி வலிமை' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நெருக்கடி காலத்தின்போது பாராளுமன்றத்தை பாதுகாத்ததற்காக முன்னாள் சபாநாயகருக்கு நன்றி கூறுகின்றேன். நிதியதிகாரம் பாராளுமன்றத்திடமே இருப்பதால், பாராளுமன்றம் இல்லாமல் பொருளாதார மீட்சியை சாத்தியப்படுத்தியிருக்க முடியாது. உணவு, எரிபொருள் மற்றும் உரம் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த அக்காலப்பகுதியில் அரசியல் கட்சி அமைப்பும் சிதைவடைந்திருந்தது.
அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறிய போது ஏற்பட்ட அதிகார வெற்றிடத்தின் போது, எதிர்க்கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகியன அரசாங்கத்தை அமைக்க மறுத்த நிலையில், ஆரம்பத்தில் தனியொருவராக எந்தவொரு கட்சியின் ஆதரவும் இன்றி நான் சவாலை ஏற்றுக்கொண்டேன். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வரிகளை அதிகரிப்பது போன்ற வேதனையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. இது மக்களை பாதித்தாலும், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கும் வருவாயை உறுதி செய்வதற்கும் அவசியமாக இருந்தது.
இலங்கையின் நிலைமையை பங்களாதேஷில் அண்மையில் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மற்ற நாடுகளில் அரசாங்கங்கள் கவிழ்ந்து வன்முறைகள் (துப்பாக்கிச் சூடு) அதிகரித்த நிலையில், இலங்கை இராணுவ ஒடுக்குமுறையோ அல்லது பாரிய உயிரிழப்புகளோ இன்றி, ஜனநாயக வழிகளிலும் அரசியலமைப்பின் மூலமும் நெருக்கடிகளைக் கையாண்டது.
எனது தனிப்பட்ட இல்லம் தீக்கிரையாக்கப்பட்டது. பின்னர் பிரதமர் அலுவலகம் தாக்கப்பட்ட போதும் கூட, போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை பாதுகாப்புப் படையினர் தவிர்த்தனர். எக்காரணத்துக்காகவும் இரத்தம் சிந்துவதை தவிர்க்குமாறு நான் அறிவுறுத்தியிருந்தேன். பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் ஜனநாயகத்தின் மையத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தனர். பாராளுமன்றத்தை பாதுகாப்பதே அரசை பாதுகாப்பதற்கு மிக முக்கியமானதாகும்.
எரிபொருள், உணவு மற்றும் உரம் வழங்குதல், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதல் மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்டங்களை நிறைவேற்றுதல் போன்ற போராட்டத்தின் முதன்மையான கோரிக்கைகளை எமது அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை ஆசியாவின் மிகப் பழைமையான ஜனநாயகம் மிக்க நாடாகும். லிபியா அல்லது தற்போது அமைதியின்மையை எதிர்கொள்ளும் பிற நாடுகளைப் போலல்லாமல், இந்த ஜனநாயகப் பாதையைப் பேணுவது நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது.
நாங்கள் பாராளுமன்றத்தை பாதுகாத்தோம். அந்த முறைமையை பாதுகாத்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை எம்மால் பாதுகாக்க முடிந்தது. பங்களாதேஷில் என்ன நடந்தது? ஆனால் எமது நாட்டில் பிரஜைகள் உயிரிழக்கவில்லை. யாருக்கும் அடிபணியாமல் பிரச்சினைகளை எம்மார் தீர்க்க முடிந்தது என்றார்.




.jpg)






.jpeg)