ஜப்பானிய வேலைவாய்ப்புகளுக்காக இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்துள்ள நிறுவனங்களின் பிரதானிகள் சிலர் நேற்று (19) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் அதன் உயர் முகாமைத்துவத்தை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து அதிகளவான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதும், ஜப்பானிய வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதும் இந்த பிரதானிகள் விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன்போது, 2026 ஆம் ஆண்டில் ஜப்பானிய மொழிப் பயிற்சியை நிறைவு செய்த 5000 இலங்கையர்களை உருவாக்கவும், பணியகம் ஊடாக புதிய வேலைத்திட்டமொன்றை உருவாக்கி IM Japan நிறுவனம் ஊடாக சுமார் 1000 பேரை ஜப்பானுக்கு அனுப்பவும் எதிர்பார்ப்பதாக கோசல விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.
மேலும், அதிகளவானோருக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதால், அதற்காக மாவட்ட மட்டத்தில் பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, மொழி மற்றும் திறன் மிக்க இலங்கையர்களை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




.jpg)







